1. கற்பூரவல்லி வாழைப்பழத்தைப் பார்.
  2. கற்பூரவல்லி வாழைப்பழத்தில் இருப்பவைகளைப் பார்.
  3. கற்பூரவல்லி வாழைப்பழத்தோடு இருப்பவைகளைப் பார்.
  4. கற்பூரவல்லி வாழைப்பழமாய் ஆனவைகளைப் பார்.
  5. கற்பூரவல்லி வாழைப்பழத்தால் ஆனவைகளைப் பார்.
  6. கற்பூரவல்லி வாழைப்பழத்துக்கு ஒத்தவைகளைப் பார்.
  7. கற்பூரவல்லி வாழைப்பழத்துக்கே உரித்தானவைகளைப் பார்.  
ஏழையும் பார்த்திருக்கிறாயா?
பார்த்திருந்தால், உலகம் போற்றும் ஞானியாக, விஞ்ஞானியாக ஆகியிருப்பாய்!



எதைப் பற்றி விரிவான அறிவு பெற வேண்டுமோ, அதைப் பார், அதில் இருப்பவைகளைப் பார், அதோடு இருப்பவைகளைப் பார், அதாய் ஆனவைகளைப் பார், அதால் ஆனவைகளைப் பார், அதற்கு ஒத்தவைகளைப் பார், அதற்கே உரித்தானவைகளைப் பார்.


மெய்ப்பொருள் காண்பதறிவு